January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியது!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் 84 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெட்ரோல் 90 ரூபாவினாலும், ஒடோ டீசல் 113 ரூபாவினாலும், சூப்பர் டீசல் 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுள்ளது.

இதற்கமைய, பெட்ரோலியக் கூட்டுத்தப்பான எரிபொருள் நிலையங்களில் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 338 ரூபாவுக்கும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 389 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும்.

அத்துடன், ஒடோ டீசல் லீட்டர் ஒன்று 289 ரூபாவுக்கும், சூப்பர் டீசல் லீட்டர் ஒன்று 329 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே லங்கா ஐஓசி நிறுவனம் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் விலைகளை அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.