February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகக் கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சு எடுத்தத் தீர்மானம்!

இலங்கையில் முகக் கவசம் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்கள் தவிர்ந்த மற்றைய இடங்களில் முகக் கவசம் அணிவது கட்டாயமில்லை என்று சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இன்று முதல் இது நடைமுறைக்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக 2020 மார்ச் மாதம் முதல் பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை சுகாதார அமைச்சு சட்டமாக்கியிருந்தது.

எனினும் தற்போது தடுப்பூசிகள் மூலம் கொவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், முகக் கவசம் தொடர்பாக கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.