அரசாங்கத்தில் 21 பேர் இராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இவர்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான சுரேன் ராகவன், எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்க பக்கம் தாவிய அரவிந்த குமார் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
இன்று மாலை இவர்கள் ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டனர்.
இராஜாங்க அமைச்சர்களின் விபரங்கள்
ஜி.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ரோஹன திஸாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர்
அருந்திக பெர்னாண்டோ– பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர்
லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
தாரக பாலசூரிய – வெளிநாட்டு விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர்
இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்
சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்
சிறிபால கம்லத் – மஹாவலி இராஜாங்க அமைச்சர்
அனுராதா ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்
பிரசன்ன ரணவீர – தொழில்துறை இராஜாங்க அமைச்சர்
டி.வி.சானக – சுற்றுலா, மீன்பிடி இராஜாங்க அமைச்சர்
டிபி ஹேரத் – கால்நடை இராஜாங்க அமைச்சர்
அரவிந்த குமார் – பொருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர்
கீதா குமாரசிங்க – கலாச்சார, கலைநிகழ்ச்சிகள் இராஜாங்க அமைச்சர்
குணபால ரத்னசேகர – கூட்டுறவு, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கபில நுவான் – சிறு பயிர்த் தோட்ட இராஜாங்க அமைச்சர்
கயாஷான் நவனந்த – சுகாதார இராஜாங்க அமைச்சர்
சுரேன் ராகவன் – கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர்
காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சர்