November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்தவிடம் இருந்து அரசியலமைப்பு திருத்த யோசனை!

அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான யோசனையை அமைச்சரவையில் முன்வைப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்க சபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கியதாக அந்த யோசனையை அவர் அமைச்சரவையில் முன்வைப்பார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களிற்கு பொறுப்புக்கூறும் அரசாங்கத்தினை உருவாக்கவேண்டும் என பல தரப்பினரும் விடுத்துவரும் வேண்டுகோள்கள் குறித்து கவனம் செலுத்தியே இந்த தீர்மானத்தை அவர் எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரசியலமைப்பு திருத்தங்களின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமாக இருக்கும் என்று பிரதமர் கருதுவதாகவும் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி, பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்பில் திருத்தங்களை முன்வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கைகள் விடுத்து வரும் நிலையிலேயே பிரதமர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதேவேளை புதிதாக இன்று அமைச்சர்களாக பதவியேற்வர்களை சந்தித்துள்ள பிரதமர், அரசாங்கதத்தின் செயற்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களை தெளிவுப்படுத்தியுள்ளார்.