அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாகியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியான அணியாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய பாராளுமன்றத்தில் தமக்கு தனியான ஆசனங்களை ஒதுக்குமாறு அவர்கள் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 13 உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 11 கட்சிகளை சேர்ந்த 16 உறுப்பினர்களும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த 9 உறுப்பினர்களும் அடங்கலாக 40 பேர் தனி அணியாக செயற்படவுள்ளனர்.
நாளைய தினம் பாராளுமன்றம் கூடும் போது, இவர்கள் தனியாக செயற்படுவது தொடர்பில் அறிவிக்கவுள்ளனர்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விசேட உரையொன்றை பாராளுமன்றத்தில் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை எதிர்க்கட்சிப் பக்கத்தில் தனியாக செயற்படவுள்ள இவர்கள் பொது எதிரணியை அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.