
file photo
இலங்கையில் 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரிகளின் நெருங்கிய 400க்கு மேற்பட்ட உறவினர்களை களுத்துறை மற்றும் குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 1000க்கு மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தமது விடுதிகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிச்சாலை பொறுப்பதிகாரிகளிடம் இருந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்ட அவர், சிற்றுண்டிச்சாலை பொறுப்பதிகாரிகள் பேலியகொடை மீன் சந்தைக்குச் சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.