ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.
இன்று முற்பகல் 10.30 மணியளவில் 17 பேர் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதன்போது சமல் ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தை சேர்ந்த எவரும் பதவியேற்கவில்லை.
அமைச்சர்கள் விபரம்
தினேஷ் குணவர்தன – பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்
ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர்
நாசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில் அமைச்சர்
கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்
நாலக கொடஹேவா – ஊடகத்துறை அமைச்சர்
காஞ்சனா விஜேசேகர – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர்
சன்ன ஜயசுமண – சுகாதாரத்துறை அமைச்சர்
பிரசன்ன ரணதுங்க – பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
திலும் அமுனுகம – போக்குவரத்து, கைத்தொழில் அமைச்சர்
விதுர விக்கிரமநாயக்க – தொழில் அமைச்சர்
ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சர்
ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி விவகார அமைச்சர்
மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர்
விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சர்
தேனுக விதானகமகே -விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்