May 23, 2025 5:23:21

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தலைமை தாங்க நான் தயார்” ரணில் விக்கிரமசிங்க!

மக்கள் கோரினால் இடைக்கால அரசாங்கத்திற்கு தலைமை தாங்க தான் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் போக்குவரத்து சங்க பிரதிநிதிகளுடன் இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நிலைமையில் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசாங்கம் முழுமையாக விலகிச் செல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாக இருந்தால், குறுகியக் காலத்திற்காவது தலைமை தாங்குவதற்கு தான் தயாராக இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக, அந்த சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் கூறியுள்ளார்.