February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை பொலிஸ் இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

அந்த இணையத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானமையை உயர் பொலிஸ் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த சில தினங்களாக குறித்த இணையத்தளம் இயங்காது இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.