January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாடசாலை நேரம் தொடர்பில் கல்வி அமைச்சு முக்கியத் தீர்மானம்!

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்த பாடசாலைகளும் திட்டமிட்டப்படி ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்கும் தீர்மானத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக கடந்த வருடங்களில் பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த காரணத்தினால், 2021 ஆம் ஆண்டின் இறுதித் தவணை 2022 ஏப்ரல் 5 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.

இதன்படி புதிய தவணை ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படுவதால், எதிர்வரும் 8 மாதங்களுக்குள் இந்த வருடத்தின் அனைத்து தவணைகளையும் பூர்த்தி செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதனால் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இதற்கு ஆசிரியர் சங்கங்கள் இணக்காத காரணத்தால் அந்தத் தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கும், எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் இது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை எடுப்பதற்கும் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.