January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நெருக்கடியால் மூடப்படும் கொழும்பு பங்குச் சந்தை!

கொழும்பு பங்குச் சந்தையை தற்காலிகமாக ஒரு வாரகாலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவீத்துள்ளது.

இதற்கமைய ஏப்ர்ல் 18 முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமை பங்குச் சந்தை நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரங்களில் பங்குச் சந்தையில் பரிவர்த்தனை நடவடிக்கைகள் பெருமளவுக்கு வீழ்ச்சியடைந்திருந்ததை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.