நிதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட இலங்கையின் உயர்மட்டக் குழுவொன்று அமெரிக்கா பயணமாகியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காகவே இவர்கள் அங்கு சென்றுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
அதன்படி, அமெரிக்காவின் வொஷிங்டனில் நகரில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்தில் அதிகாரிகளுடன் இவர்கள் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இந்த கலந்துரையாடல் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.