January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவோம்”

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபததி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைதி, தைரியம் மற்றும் நம்பிக்கை ஆகிய ஆன்மீக பரிசுகளால் அனைவரின் வாழ்க்கையையும் வளப்படுத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆசிர்வதிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு பண்டிகையாக அமைய பிரார்த்திக்கின்றேன் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சோகமான அனுபவம் இன்னும் நம் மனதில் நீங்காமல் இருக்கின்றது என்று கூறியுள்ள ஜனாதிபதி, அதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையான விசாரணைகள் மூலம் நீதியை நிலைநாட்டுவதற்கும், தாக்குதலுக்கு காரணமான அனைவருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.