May 25, 2025 18:38:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் பதவி விலகினார்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜெயசிங்க பதவி விலகியுள்ளார்.
தனது பதவி விலகல் தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தற்போதைய நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெஷார ஜெயசிங்க தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தீர்க்க முடியுமென்றும், காலம் தாழ்த்தாது அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

லிட்ரோ எரிவாயு விநியோகம் கடந்த 13 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.