February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது!

ஏப்ரல் 15 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மோட்டார் சைக்கிள்களுக்கு 1000 ரூபா வரையிலுமே பெட்ரோலை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் முச்சக்கர வண்டிகளுக்கு 1500 ரூபா வரையிலும், கார், வான் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 5000 ரூபா வரையிலுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பஸ்கள், லொறிகள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் செயற்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.