தங்களின் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை என்பதனை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது திட்டங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறியுள்ளார்.
மக்கள் அரசாங்கத்தின் மீது ஏன் கோபமாக உள்ளனர் என்பது தமக்கு புரிகிறது எனவும், ஆனால் இது கோபத்திற்கான நேரமாக இருக்கக் கூடாது என்றும் தீர்வுக்கான நேரமாகவே இருக்க வேண்டும் என்றும் அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் வெளிப்படை தன்மையற்ற செயற்பாடுகளே நிலைமைக்கு காரணம் என்றும், நாட்டின் நிலைமை தொடர்பிலும், அதனை சமாளிப்பதற்கான திட்டங்கள் குறித்தும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னரே மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ, அந்த நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.