May 2, 2025 0:01:24

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தள்ளிப் போகும் நம்பிக்கையில்லாப் பிரேரணை!

எதிர்க்கட்சியினால் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரத் தீர்மானித்துள்ள நம்பிக்கைகயில்லா பிரேரணையை ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில், இதனை ஏப்ரல் 19 ஆம் திகதி சபாநாயகரிடம் சமர்ப்பிப்பதற்கு முதலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த நடவடிக்கையை ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்க தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு நம்பிக்கையில்லா பிரேரணை தாக்கத்தை செலுத்தும் என்பதனாலேயே அதனை ஒத்தி வைக்க அவர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையில் கையெழுத்தைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.