அனுமதி பெற்றவர்கள் தவிர்ந்த வேறு எவருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கலன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் வழங்கப்படாது என்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டையும் அது தொடர்பான மோசடிகளையும் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூட்டுத்தாபத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, கைத்தொழில் நோக்கங்களுக்காக கலன்கள் மற்றும் பெரல்களுக்கு எரிபொருளை பெற அவசியமானால், சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெறுவதற்கு கமநல சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
களன்கள் மற்றும் பெரல்களில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வோர், அவற்றை பதுக்கி வைத்து கூடிய விலைக்கு விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.