ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி கொழும்பு காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் ஆறாவது நாளாகவும் இன்று தொடர்கின்றது.
கடந்த சனிக்கிழமை முதல் ஆரம்பமாக இந்த ஆர்ப்பாட்டம் இடைவிடாது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
தமிழ், சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ள நிலையில், அதில் கலந்துள்ள பலர் வீடு செல்லாது தொடர்ந்தும் அங்கு தங்கியுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக இன்று காலை முதல் பெருந்திரளான மக்கள் அங்கு சென்றுள்ளனர்.
அங்கு பால் பொங்கி அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதேவேளை பல்வேறு நபர்களும் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை அங்குள்ளவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.