January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவிடமிருந்து மேலும் 2 பில்லியன் டொலர் நிதியுதவி!

இலங்கைக்குத் தேவையான உணவு மற்றும் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக மேலும் 2 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஏற்கனவே இலங்கை – இந்தியா இடையே பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் கடன் மீள்செலுத்துகையை தற்காலிகமாக நிறுத்துவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

இவ்வாறான இலங்கையின் முடிவு குறித்து இந்திய அரசாங்கம் கவலை தெரிவித்தாலும், இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.