January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை நிலைமை தொடர்பில் உலக வங்கி கவலை!

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வறுமை கோட்டுக்கு உட்பட்டோர் மற்றும் நலிவடைந்தவர்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் உலக வங்கி உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து கவலையடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நோக்கமே முக்கிய காரணம் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.