January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”காலிமுகத்திடல் போரட்டத்தில் அடிப்படைவாதிகள்”: பொதுபல சேனா சாடல்!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் நாட்டில் அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் செயற்படுவதாக பொதுபல சேனா அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சலாபிகள், வஹாபிகள் மற்றும் ஜமாத் – இ – இஸ்லாமியர்களை அந்த ஆர்ப்பாட்டத்திற்குள் அடையாளம் கண்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை அந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகளை அவமதிக்கும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், இதனை தாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் பொதுபல சேனா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தற்போதைய நிலைமையில் தாய் நாட்டுக்கு எதிரான சக்திகளின் நோக்கங்களை தோற்கடிக்கவும், மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுபல சேனா தெரிவித்துள்ளது.