நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியுடனான சவாலை ஒற்றுமையுடனும், சரினான புரிந்துணர்வுடனும் வெற்றிகொள்ள வேண்டும் என ஜனாதிபாதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழ் – சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மலர்ந்துள்ள புத்தாண்டு, நிலவுகின்ற சவால்களை வெற்றிகொள்ளும் சுபீட்சம் நிறைந்த ஆண்டாக அமைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக அவர் கூறியுள்ளார்.
பிரதமர் வாழ்த்து
நாட்டில் நிலவும் இக்கட்டான சூழ்நிலையை கடந்து செல்வதற்கு நாம் அனைவரும் ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
துன்பத்தை வென்று மகிழ்ச்சியை அடையும் எதிர்பார்ப்பை குறிக்கும் தமிழ்-சிங்கள புத்தாண்டானது நம் அனைவரதும் மாபெரும் கலாசார பெருவிழாவாகும். பிறக்கும் புத்தாண்டில் நம் நல்லெண்ணங்களை அடைவதை நோக்கமாகக் கொள்வதே அனைவரது எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இச்சவால் மிகுந்த காலகட்டத்தில் எதிர்பாராத விதமாக நாம் அனைவரும் முகங்கொடுத்த, கொடுத்துவருருரும் துன்பங்களை ஒவ்வொன்றாக இல்லாதொழிப்பதற்கு தேவையான எதிர்கால திட்டங்களை அரசாங்கம் ஏற்கனவே செயற்படுத்தி வருகின்றது எனவும் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.