January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் அழைப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பதில்!

தங்களுடன் கலந்துரையாட வருமாறு பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ விடுத்திருந்த அழைப்புக்கு, கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களிடம் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டாகோகம’ என்ற கிராமத்தில் இருந்து பிரதமருக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில், ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமர் உள்ளிட்ட ராஜபக்‌ஷ குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அரசாங்கத்தில் இருந்தும், பாராளுமன்றத்தில் வகிக்கும் அனைத்து பதவிகளில் இருந்தும் விலக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றாது எந்த வகையிலும் பேச்சுக்கு வருவதற்கு நாங்கள் தயாராக இல்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.