January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்திட்டது!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கையெழுத்திட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் வைத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் அதில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கையெழுத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியினர், அதற்கான கையெழுத்து பெறும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் அதில் கையெழுத்திட்டிருந்தார்.