இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 11,000 மெட்ரிக் டொன் அரிசியை ஏற்றிய கப்பல் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.
அரிசியுடன் வந்த ‘ச்சென் குளோரி’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும் அங்கு சென்ற இந்தியத் தூதரக அதிகாரிகள் அரிசி மூடைகளை இலங்கை அதிகாரிகளிடம் கையளித்தனர்.
இலங்கை மக்களின் புதுவருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியா – இலங்கை இடையிலான விசேட பிணைப்பினைக் குறிக்கும் இவ்வாறான ஆதரவுகள் தொடரும் என்றும் தூதகரம் குறிப்பிட்டுள்ளது.
11,000 MT of rice which came under #Indian assistance today was handed over by officials of the High Commission to GOSL officials in #Colombo port a while ago. pic.twitter.com/Sf2aYXat2M
— India in Sri Lanka (@IndiainSL) April 12, 2022