இலங்கையின் அனைத்து வெளிநாட்டு சாதாரண கடன் கொடுப்பனவுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் கூறப்பட்டுள்ள பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதன்படி நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகை குறுகிய காலத்துக்கு இடைநிறுத்தப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் கிடைக்கும் நிதியுதவியின் பின்னர் மீண்டும் கடன் மீளச் சொலுத்துதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பபட்டுள்ளது.
இலங்கையினால் இந்த வருடத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுக்காக மீளச் செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் இலங்கையில் தற்போது 1.93 பில்லியன் டொலர்களே கையிருப்பில் இருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.