ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினரான சாந்த பண்டார அரசியல் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயதீனமாக செயற்படுவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருக்கையில், சாந்த பண்டார எம்.பி, நேற்றைய தினம் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
இந்நிலையில், அவரை கட்சியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் நீக்கியுள்ளதாக சுதந்திரக் கட்சியின் தலைமைப் பீடம் இன்று அறிவித்துள்ளது.
இதேவேளை இன்று கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்றில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த நேரத்தில் எவராவது அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுப்பார்களா என கேள்வியெழுப்பியுள்ளார்.
ஆனால், சாந்த பண்டார அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு அரசியல் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறியுள்ளார்.