
ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் இலங்கையின் மூத்த பாடகியான நந்தா மாலனியும் கலந்துகொண்டுள்ளார்.
இன்று முற்பகல் ஆர்ப்பாட்ட இடத்திற்கு சென்ற அவர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், தானும் அரசாங்கத்திற்கு எதிரான பதாகையொன்றை ஏந்தினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ”பலம் நிறைந்த இளம் போரட்டக்காரர்களுக்கு நாட்டை மாற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.
சனிக்கிழமை முதல் தொடர்ச்சியாக நான்காவது நாளாகவும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஜனாதிபதிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.