”போலியான போராட்டங்களின் போர்வையில் சிங்கள பௌத்த மக்கள் ஆணையில் கை வைக்காதே” என்று பௌத்த பிக்குகள் கொழும்பில் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு தாமரை தடாக மண்டபம் பகுதியில் இருந்து இந்தப் பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
இதில் பெருமளவான பிக்குகளும், சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவாக நடத்தப்படும் இந்தப் பேரணி, தாமரைத் தடாக மண்டபத்திற்கு அருகில் இருந்து விகாரமஹாதேவி பூங்கா வரையில் நடத்தப்பட்டது.