எதிர்க்கட்சியினால் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டு வரத் திட்டமிட்டுள்ள குற்றப் பிரேரணை விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் கூட்டாகவே தீர்மானம் எடுக்க வேண்டும் என்று புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும் போதே சித்தார்த்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது ஜனாதிபதிக்கு எதிராகவோ எந்தவிதமான பிரேரணை கொண்டுவந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு எடுக்கப்படும் தீர்மானமே பலமானதாக இருக்கும் என்று கருதுவதாகவும், எனினும் கூட்டாக இணைந்து தீர்மானம் எடுக்க முடியாவிட்டால் தனியாக தீர்மானம் எடுக்கவும் தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் சித்தார்த்தன் கூறியுள்ளார்.