January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மொட்டுக் கட்சியில் நாமலுக்கு முக்கியப் பதவி!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு முக்கிய பதவி வழங்கப்படவுள்ளதாக அந்தக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடைபெறவுள்ளதாகவும், இதன்போது முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வேளையில் நாமல் ராஜபக்‌ஷவுக்கு உயர் பதவியொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும், அதனை ஏற்றுகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைவராக மகிந்த ராஜபக்‌ஷ பதவி வகிப்பதுடன் செயலாளராக சாகர காரியவசமும், தேசிய அமைப்பாளராக பஸில் ராஜபக்‌ஷவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.