
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.
சனிக்கிழமை காலை முதல் இடைவிடாது இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதில் பெருந்திரளான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை பலரும் வழங்கி வருகின்றனர்.