ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சனிக்கிழமை ஆரம்பமான போராட்டம் மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது.
ஜனாதிபதி செயலகத்தை அண்மித்த பகுதியில், கூடாரங்கள் அமைத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் தங்கியிருந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதியை ‘கோட்டா கோ கம’ என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் பெயரிட்டுள்ளனர்.
இந்த பெயர் கூகுள் வரைபடத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை காலி முகத்திடல் பகுதியில் கூடிய ஆயிரக் கணக்கான இளைஞர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் அந்தப் பகுதியில் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி பதவி விலகும் வரையில் இந்த இடத்தைவிட்டு செல்ல மாட்டோம் என்று ஆர்ப்பாட்டக் காரர்கள் தெரிவித்துள்ளனர்.