இலங்கையில் அரசாங்க மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த தட்டுப்பாட்டு நிலைமையை நிவர்த்தி செய்வதற்காக தனவந்தர்களின் உதவியை சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைகளில் சில மருந்துவகைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இவ்வாறு இரண்டு மாதத்திற்கான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியொருவர் கூறியுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தனவந்தவர்கள் உதவ முன்வர வேண்டும் என்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.