பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
இன்று இரவு 7.30 மணியளவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் இதன்போது கூறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன், அதன்போது புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் தரப்பினர் நேற்று ஜனாதிபதியை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறான நிலைமையிலேயே பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
இதன்போது இந்த விடயம் குறித்து தனது நிலைப்பாட்டை பிரதமர் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.