
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் அதேவேளை, அவருக்கு ஆதரவாகவும் சில தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் அநுராதபுரம் நகரில் ஜனாதிபதிக்கு ஆதரவாக இன்று பேரணிகள் ஏற்படு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இவர்களின் பேரணிகளுக்கு எதிரான வகையில் அங்கு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
பேரணிகளில் கலந்துகொள்ள வருபவர்களுக்காக என்று கூறி அநுராதபுரம் நகரில் பல இடங்களில் புல், புண்ணாக்கு வைக்கப்பட்டுள்ளன.
‘எஞ்சியுள்ள மாடுகளுக்காக’ என்று குறிப்பிட்டு அவை வைக்கப்பட்டுள்ளன.