January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நாங்கள் என்றும் கோட்டாவுடன்”: பல இடங்களிலும் பேரணி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் பல இடங்களில் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

‘கோட்டா எங்களுக்கு வேண்டும்’ என்று கண்டி, அம்பாந்தோட்டை, தங்காலை, திஸ்ஸமஹராம  உள்ளிட்ட இடங்களில் இன்றைய தினம் பேரணிகள் நடத்தப்படுகின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

”நாட்டை கட்டியெழுப்பும் தலைவன் கோட்டாபயவே”, ”என்றும் நாங்கள் உங்களுடன் இருப்போம்” என்று கோசங்களை எழுப்பியவாறு அவர்கள் பேரணிகளில் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் நேற்று காலை ஆரம்பமான ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.