January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு கோரிக்கை!

இலங்கையில் சுகாதார அவசரகார நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் சுகாதார அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டையடுத்தே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அந்த சங்கத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரத்தினசிங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையில் சகல தரப்பினரையும் அழைத்து ஏற்பட்டுள்ள மருந்து தட்டுபாடு மற்றும் மருத்துவ உபகரணங்களின் நிலை குறித்து பரிசீலிப்பது மிகவும் முக்கியமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தொழிநுட்பக் குழுவொன்றை நியமித்து தற்போது ஏற்பட்டுள்ள மருந்து முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பரிந்துரைகளை உருவாக்குவது அவசியம் என்பதோடு வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை பெறுவது அவசியம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.