இலங்கையில் ஏப்ரல் 11 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
எனினும் 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பிரதேசங்கள் தொடர்பான விபரங்களை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்.
https://cebcare.ceb.lk/Incognito/DemandMgmtSchedule
மின்வெட்டு நேர அட்டவணை