January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்!

கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நேற்று காலை ஆரம்பமான இளைஞர்களின் போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை வீட்டுக்கு போகுமாறு வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக நேற்று காலை காலிமுகத்திடல் பகுதியில் கூடிய ஆயிரக் கணக்கான இளைஞர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவர்களின் போராட்டம் இடைவிடாது தற்போதும் தொடர்கின்றது.

இன்று அதிகாலை முதல் கொழும்பில் பலத்த மழை பெய்யும் நிலையில், கொட்டும் மழைக்கு மத்தியிலும் இளைஞர்கள் அங்கு கூடியுள்ளனர்.