January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”சதித்திட்டத்தால் பிடித்த ஆட்சியை பாதுகாக்க முடியாது”

சதித்திட்டத்தால் ஆட்சியை பிடிக்க முடியும் ஆனால் அதனை பாதுகாக்க முடியாது என்று கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு அருகில் இருந்து கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் வரை நடத்தப்பட்ட அமைதி பேரணியில் கலந்துகொண்டிருந்த போதே பேராயர் இவ்வாறு கூறியுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையின் சிவில் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

ஆட்சியதிகாரத்தில் இருக்கும் தற்போதைய அரசாங்கம் அன்று தேர்தலில் களமிறங்கும் போது, ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை முழுமையாக தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த பேரழிவிற்கு பின்னால் பாரிய சதித்திட்டம் இருக்கலாம் என அப்போது புலப்பட்டது என்றும், இப்போது அந்த சதித்திட்டத்தை தீட்டியவர்கள் யார் என்பது தொடர்பில் தெளிவாகியுள்ளது என்றும் பேராயர் கூறியுள்ளார்.

அந்த சதித்திட்டக்காரர்களுக்கு ஆட்சியை கைப்பற்ற முடியும், ஆனால் ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள முடியாது. கடவுளின் சாபம் அவர்களுக்கு கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.