January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள்!

கொழும்பில் காலி முகத்திடலில் அணிதிரண்ட இளைஞர்கள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று முற்பகல் 9 மணியில் இருந்து காலி முகத்திடல் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் என்று பலரும் ஒன்று கூடினர்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல மணிநேரமாக அவர்கள் அந்த இடத்தில் இருக்கின்றனர்.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் பெருமளவான பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கலகம் அடக்கும் பொலிஸாரும் அந்தப் பகுதியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைய முடியாதவாறு, தடைகள் போடப்பட்டுள்ளன.