January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’: மகிந்தவின் பதிவு!

இலங்கை முழுவதும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு’ என்ற தமிழ் பழமொழியை பயன்படுத்தி மக்களின் ஒற்றுமை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் சிங்களத்தில் குறித்த தமிழ் பழமொழியை பதிவிட்டுள்ள அவர், அதன் அர்த்தத்தை சிங்கள மக்களுக்கு விளக்கியுள்ளார்.

”கடற்கரையோரங்களில் வளரும் அடம்பன் கொடி திரண்டு வளர்ந்தால் அது மிகவும் பலமானதாக இருக்கும். இதனை சிங்களவர்களின் ஒற்றுமையின் பலத்துடனும் ஒப்பிட முடியும்” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.