November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வரிகள், எரிபொருள் விலைகள் மேலும் அதிகரிக்கப்படலாம்”

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்தும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்தும் கடனுதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக இலங்கையின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் நிதி நெருக்கடி நிலைமையை சீர்செய்யும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும், இதன்படி, அடுத்த ஆறு மாதங்களுக்குள் வரி விகிதங்களை உயர்த்தி எரிபொருள் விலையை மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படலாம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரொய்ட்டர்ஸ்  செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலின் போதே நிதி அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள நெருக்கடி நிலைமையில், அடுத்து வரும் ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களுக்காக குறைந்தது 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், இதன்போது இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் அவர் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.