January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு காலி முகத்திடலில் அணிதிரளும் இளைஞர்கள்!

அரசாங்கத்திற்கு எதிராக பெருந்திரளான இளைஞர்கள் கொழும்பு காலிமுகத்திடலில் கூடியுள்ளனர்.

சமூக வலைத்தளங்களின் ஊடாக இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி நிலைமை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இலங்கை முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவி விலகிச் செல்லுமாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்படி, கொழும்பில் இன்றைய தினம் கூடிய இளைஞர்கள், காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், இளைஞர்கள் அமைப்புகள் என்பனவும் கலந்துகொண்டுள்ளன.