நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்து கூட்டறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், அமைதியாக ஒன்றுகூடுதலும் கருத்து சுதந்திரமும் ஜனநாயக சமூகமொன்றின் அடிப்படை உரிமைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலநிலை பிரகடனம் இரத்து செய்யப்பட்டமை சாதகமான நடவடிக்கை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மேற்கொள்ளக்கூடிய ஜனநாயக வழிமுறை தொடர்பில் கவனம் செலுத்துவது அனைத்து தரப்பினரின் பொறுப்பாகும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.