அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இருந்து பத்தரமுல்லை பாராளுமன்ற சந்தி வரையில் இவர்கள் பேரணியை நடத்தினர்.
இதன்போது பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதியில் வீதித்தடைகளை போட்டு மாணவர்களை பொலிஸார் தடுத்த நிலையில் இரண்டு தரப்பினருக்கும் இடையே கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
இவ்வேளையில் வீதித்தடைகளையும் தள்ளி வீழ்த்தி விட்டு பாராளுமன்றம் நோக்கிச் செல்வதற்கு மாணவர்கள் முயன்றபோது, அங்கு ஏற்பட்டிருந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை நடத்தியுள்ளனர்.
எனினும் தொடர்ந்தும் அந்தப் பகுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் வீதியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.