ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையில், அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் பேரணி நடத்தியுள்ளனர்.
கொழும்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.
தேசிய கொடிகளை ஏந்தியாவறு, ”கோட்டாபய எங்களுக்கு வேண்டும்”, ”நாங்கள் எப்போதும் உங்களுடன்” என்ற கோசங்களை எழுப்பியவாறு இவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்ற இவர்கள், நாங்கள் இந்த அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் பதவிக்கு கொண்டு வர பாடுபட்டதை போன்று, இந்த ஆட்சியை பாதுகாக்கவும் பாடுபடுவோம் என்று கூறினர்.