இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கி லென்ஹோங் இன்று மாலை கொழும்பை வந்தடைந்தார்.
14 நாள் சுய தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவர் தன்னுடைய கடமைகளை பொறுப்பேற்பாரென கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட இராஜதந்திரியான கி லென்ஹோங் , சர்வதேச கற்கைகளுக்கான சீன நிலையத்தின் தலைவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.